Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (27-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!!

நாளைய  பஞ்சாங்கம்

27-09-2020, புரட்டாசி 11, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

திருவோணம் நட்சத்திரம் இரவு 08.49 வரை பின்பு அவிட்டம்.

அமிர்தயோகம் இரவு 08.49 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

ஏகாதசி விரதம்.

ஹயக்ரீவர் வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

 எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

 குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

 சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

நாளைய ராசிப்பலன் –  27.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வசதி கிடைக்கப்பெற்று சந்தோஷம் அடைவீர். பெரியவர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு அகலும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.தர்ம காரியங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடும் செலவு அதிகரிக்கும். உடல் நலத்திற்காக சிறு தொகை செலவாகும். தொழிலில் உடன் இருப்பவர்கள் உங்கள் குணமறிந்து இருப்பார்கள். வீட்டில் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் பெருகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதனால் மனஉளைச்சல் அதிகமாகும்.எந்த வேலை செய்தாலும் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வீட்டில் வீண் பேச்சை தவிர்க்கவும் அதுவே நல்லது. வெளி பயணங்கள் கூடுவதால் கவனம் கொள்ளுங்கள்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுபகாரியங்களில் முன்னேற்றம் வரும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் வெளியூர் பயணம் செல்ல கூடும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு உண்டாகும். புதிய முயற்சி எடுப்பதனால் நல்ல முடிவு கிடைக்கும். குழந்தைகள் விரும்புவதை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்தியைக் கொடுக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பொருளாதாரப் பிரச்சினையால் வீட்டில் பிரச்சனைகள் வரும். ஆரோக்கியத்தில் பாதிப்பு வரக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் கொள்ளுங்கள் அதுவே நல்லது. உற்றார் உறவினர்களால் உதவி பெறக்கூடும். வெளியூர் பயணங்களால் உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத செலவு ஏற்படலாம். உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள்.உற்றார் உறவினரிடம் மாறுபட்ட பிரச்சனையால் மனஸ்தாபம் உண்டாகும். வெளி பயணங்களால் வீண் அலைச்சல் உண்டாகும். தொழிலில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் கூடும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழிலில் சிறுசிறு மாற்றங்களால் லாபம் அடையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் உண்டாகும். ஆடம்பர பொருட்களை வாங்கி விரும்புவீர்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு கூடும். வெளி பயணங்களில் மேற்கொள்ளும் போது கவனமாக செல்லுங்கள் அதுவே நல்லது. பெரியவர்களின் மனக் கஷ்டத்திற்கு ஆளாகி விடுவீர். சிக்கனமாக இருங்கள் அதுவே நல்லது. குழந்தைகளின் பொறுப்பு அறிந்து செயல்படுவீர்கள்.

மகரம்

உங்களின் ராசிக்கு உடல்நிலை சீராக இருக்கும். குழந்தைகள் முலம் மன மகிழ்ச்சி உண்டாகும். பிரேவியஸ் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். உடனிருப்பவர்களின் ஆலோசனை வெற்றியை தரும். வியாபாரம் பெருகும். சேமிப்பு உயரும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் தேவை இல்லாமல் மனஸ்தாபம் உண்டாகும். உடல் நிலையில் சிறு உபாதை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் இடையூறு வரக்கூடும். பொறுமையாக இருந்தால் பிரச்சனை அனைத்தும் விடவும். நண்பர்களின் மூலம் அனுகூலம் கிட்டும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டில் செலவு கட்டுக்கு அடங்கி இருக்கும். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களால் உதவி பெற கூடும். வியாபாரத்தில் பிரச்சினைகள் குறையும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும்.

Categories

Tech |