Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…!! வெற்றி கிடைக்கும்..! புகழடைவீர்கள்..!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும்.

எடுக்கக்கூடிய முயற்சிகளிலும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தெய்வீக காரியங்களில் மனதிற்கு அமைதியை கொடுக்கும். அரிய சாதனைகளைப் புரிந்து புகழடைவீர்கள். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்க வேண்டாம். மேஷம் ராசி நேயர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள். ஆகையால் பணம் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். வயிறு சம்பந்தமான உபாதைகள் கொஞ்சம் வரும். மிக கவனமுடன் இருக்க வேண்டும். வருமானத்தைப் பொறுத்தவரை எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் நல்லபடியாகவே இருக்கங்க. நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலையும் மாறும்.  பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப ரொம்ப நல்லதுங்க.

கூடுமானவரை இன்று யாரிடமும் கடனாக ஏதும் வாங்க வேண்டாம். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் மாணவக் கண்மணிகளுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பிரச்சனை ஏதுமில்லை. பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

நிதானத்தை கடைபிடியுங்கள். பொறுமை என்பது ரொம்ப ரொம்ப அவசியம். அதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல் பங்குச்சந்தையில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு  அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை முழுமையாக வணங்குங்கள் அனைத்து விதத்திலும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.  அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு, அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8, அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |