Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…!! தேவைகள் நிறைவேறும்..! வாய்ப்பு அமையும்..!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அதிகப்படியாக கடன் வாங்க வேண்டியிருக்கும்.

கடன் சுமையை தயவு செய்து கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். மனைவி தேவையற்ற பொருட்களை வாங்க சொல்லி தொந்தரவு கொடுப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை காரணமாக உணவு உண்ணும் நேரம் இல்லாமல் இருக்கும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உங்கள் வார்த்தை உங்களுக்கு எதிரியாக மாறலாம். தொழில் தொடங்குவதற்கு இடம் பார்ப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டுக்கட்டைகள் ஓரளவு சரியாகும். பிரச்சனை இல்லை. வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். பணவரவை பொருத்தவரை சிறப்பானதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான சில விஷங்களில்  பொறுமையாக நடந்து கொள்ளுங்கள்.

உங்களுடைய ரகசியங்களை தயவுசெய்து நண்பரிடம் தெரிவிக்க வேண்டாம். இன்று மாணவக் கண்மணிகள் முன்னேற்றமான சூழ்நிலை அனுபவிக்க கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். விளையாட்டு துறையிலும் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். காதலில் உள்ளவர்கள் மட்டும் நிதானமான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். பொறுமை என்பது ரொம்ப ரொம்ப அவசியம்.

பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் நிதானமான போக்கைக் கடைப் பிடியுங்கள். கொஞ்சம் பொறுமையாக இருந்து செயல்படுங்கள் வெற்றி உங்கள் பக்கம் வரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.   அதிர்ஷ்டமான திசை: வடக்கு, அதிர்ஷ்ட எண்:4 மற்றும் 7, அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |