Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…!! தனவரவு கூடும்..! மகிழ்ச்சி நிலவும்..!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வெற்றி படி ஏறி வீர நடை போடுவீர்கள்.

பாக்கி அனைத்தும் வசூலாகி தனவரவு கூடும். புதிய நண்பர்களால் இன்பமும் ஏற்றமும் ஏற்படும். மனத் தெம்பு மகிழ்ச்சியும் நிலவும். சிலருக்கு புதிய இடம் வாகனம் வாங்க கூடிய யோகம் உண்டாகும். அதற்கு தேவையான நிதி வசதியும் கிடைக்கும். ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வது அவசியம். தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். அரசாங்கத் துறையில் சாதகமான பலன் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உங்களுடைய திறமையும்  வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். புதிய வாய்ப்புகளை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் மிகுந்து காணப்படும். மேற்கல்வி கான முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். விளையாட்டுத் துறையிலும் வெற்றி கிடைக்கும். சக மாணவர்களின் அன்பும் கிடைக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் திருமணத்திற்காக பேசுங்கள் நல்ல செய்தி வரும். அதுபோலவே பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.

நல்லபங்குகள் என்றால் நல்ல லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அதுபோல சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடக்கு, அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9, அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |