Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…!! சந்தோஷம் கூடும்..! முன்னேற்றம் அடைவீர்..!

துலாம் ராசி அன்பர்களே..! என்று எல்லோரையும் சந்தேகம் படும் குணத்தை விட்டு விட்டால் சந்தோஷம் மிக்க வாழ்க்கை இன்று அமையும்.

தாயின் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. பயண நிலை ஏற்படும். தேவையில்லாத விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பீர்கள்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினரின் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலனைப் பெறுவீர்கள். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். பணிக்குச் செல்பவர்கள் அலுவலகத்தில் பொறுமையாக இருங்கள். வழக்கு விவகாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். அரசியலில் இருப்பவர்களுக்கு கட்சியில் சில பிரச்சனை இருந்தாலும் அதை சாதமாக சமாளிப்பீர்கள்.

அதுமட்டுமில்லை மாணவக் கண்மணிகள் இன்று வெற்றி வந்து சேரும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நிதானமான போக்கு இருந்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பேச்சில் கவனத்தை செலுத்த வேண்டும். பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். நல்ல பங்குகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் கண்டிப்பாக நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் சரியான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுபோலவே சிவ பெருமான் வழிபாட்டை நீங்கள் மேற்கொள்வது மூலம் காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றம் இருக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு, அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9, அதிர்ஷ்டமான  நிறம்: இளம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |