மீனம் ராசி அன்பர்களே..!
இன்று மனைவியின் ஒத்துழைப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
இன்று அனைத்து விஷயங்களிலும் இனிமையாகவே இருக்கும். இன்று உங்களுக்கு அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். நெருங்கிய உறவினர்களுக்கு உதவி செய்வீர்கள். வரன் தேடும் முயற்சிகள் சாதகமாக முடியும். சொத்துக்களில் முன்னேற்றம் காணப்படும். தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். இன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களும் நல்லபடியாக நடந்துமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எதையும் செய்துமுடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். கம்பீரமான தோற்றத்தாலும், வசீகரமான பேச்சாலும் அனைவரையும் கவர்வீர்கள். இன்று காதலர்கள் நிதானமான போக்கை கடைபிடிப்பது அவசியம். மாணவ மாணவியர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுபோலவே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் வெள்ளை நிறம்.