இன்றைய பஞ்சாங்கம்
28-09-2020, புரட்டாசி 12, திங்கட்கிழமை, துவாதசி திதி இரவு 08.59 வரை பின்பு வளர்பிறை திரியோதசி.
அவிட்டம் நட்சத்திரம் இரவு 10.38 வரை பின்பு சதயம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம்- காலை 07.30 -09.00,
எம கண்டம்- 10.30 – 12.00,
குளிகன்- மதியம் 01.30-03.00,
சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
இன்றைய ராசிப்பலன் – 28.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு எந்த செயல்களையும் சுறுசுறுப்பாக மன தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள்.உயர் அதிகாரிகளால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர். உத்தியோக ரீதியில் வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தாராளமான தன வரவு மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். சுப காரியங்கள் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் வெளியூர் பயணம் செல்லக்கூடும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கூடும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். வீட்டில் ஒற்றுமை குறையும். காலை 9.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயல் செய்தாலும் கவனமுடன் செய்யுங்கள் அதுவே நல்லது.புதிய முயற்சிகளை மதியத்திற்கு பின் தொடங்குவதே வெற்றியைக் கொடுக்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு மனக் குழப்பத்துடன் இருப்பீர்கள். தேவையில்லாமல் மற்றவரிடம் கோபப்படுவீர்கள். காலை 9.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர் விஷயத்தில் தலையிடுவது வேண்டாம்.முடிந்தவரை வெளி பயணங்களை தவிர்க்கவும் அதுவே நல்லது.
சிம்மம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் சீராக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் போட்டி பொறாமை அனைத்தும் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு கொள்வீர். உத்தியோகத்தில் லாபம் கிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டில் அமைதி தோன்றும். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் நல்ல பலன் கிடைக்கும். வருமானம் பெருகி சிறப்படையும்.
துலாம்
உங்களின் ராசிக்கு தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும்.உத்தியோக ரீதியில் உடன் இருப்பவர்களிடம் இருந்து தடை ஏற்படும். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வீட்டிலிருந்து பிரச்சினை அனைத்தும் நீங்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவு அதிகரிக்கும். உத்யோக ரீதியில் மந்தநிலை இருக்கும். எதிர்பாராத நேரத்தில் செலவு வரக்கூடும். உதவி கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனை மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை இருக்கும். நல்ல செய்தி வீட்டிற்கு வரும். புதிய முயற்சிகளால் முன்னேற்றம் அடைவீர்.அரசுத் துறையில் வேலை செய்பவர்களுக்கு கௌரவ பதவி அமையும். புதிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர். கொடுத்த கடன்கள் அனைத்தும் வசூலாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு மனதில் குழப்பம் உண்டாகும். தொழிலில் இடம் மாற்றம் வரும்.வீட்டில் அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சினைகள் நீங்கும். உத்யோகத்தில் சிறு மாற்றம் உண்டாவதால் லாபம் கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். வீட்டில் அமைதி இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடும். உறவினர்களின் ஆதரவு இருக்கும். பெரியவர்களின் சந்திப்பால் மனதிற்கு மகிழ்ச்சி கூடும். புதிய பொருட்களை செய்த ஆர்வம் கூடும்.
மீனம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் மந்தமாக இருக்கும். சுபகாரியங்களில் இடையூறு இருக்கும். தொழிலில் அலைச்சல் இருந்தாலும் பலன் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.