Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (29-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இது உங்கள் ராசிக்கு..!!

நாளைய  பஞ்சாங்கம்

29-09-2020, புரட்டாசி 13, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி இரவு 10.33 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.

சதயம் நட்சத்திரம் பின்இரவு 12.48 வரை பின்பு பூரட்டாதி.

நாள் முழுவதும் மரணயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பிரதோஷ விரதம்.

சிவ வழிபாடு நல்லது.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

நாளைய ராசிப்பலன் –  29.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.தொழிலில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்வதனால் லாபம் கிட்டும்.தொழிலில் இருந்த போட்டி பொறாமை அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். குழந்தைகள் பாசமாக இருப்பார்கள். தொழிலில் திறமைக்கு ஏற்ப பதவி கிடைக்கும்.உத்தியோகத்தில் உடன் இருந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்ல உறவு ஏற்படும். சுப காரியங்களில் வெற்றி கொடுக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்ய நினைத்தாலும் மற்றவர்களால் தடை வரக்கூடும். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகும். வீட்டில் உள்ளவர்களிடம் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் சிறுசிறு மாறுதல்களால் நல்ல லாபம் உண்டாகும். தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எளிதில் முடியக்கூடிய காரியம் கூட தாமதமாகும். உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். தொழிலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். புது பயணங்களையும் புதிய முயற்சிகளையும் தவிர்த்துவிடுங்கள் அதுவே நல்லது.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு உண்டாகும். உறவினர் வருகையால் சந்தோஷம் பெருகும். தொழிலில் உடன் இருப்பவர்களிடம் கருத்துவேறுபாடு அகலும். தொழிலில் உள்ள வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு லாபம் பெருகும்.தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்ல அனுகூலம் கிட்டும். வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் அனைத்தும் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க ஆர்வம் கொள்வீர்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு சுறுசுறுப்பாக வேலையை செய்து முடிப்பீர்கள். வீட்டில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழிலில் வெளியூர் பயணம் செல்வதனால் அனுகூலம் கிட்டும். உடல்நிலையில் முன்னேற்றம் காண்பீர். நண்பர்கள் உதவி கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். வீட்டில் உறவினர்களின் தொந்தரவு இருக்கும். விட்டுக் கொடுத்து செல்லுங்கள் அதுவே நல்லது. உத்தியோகத்தில் சக தொழிலாளர்களின் உதவி கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு தொழிலில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் நிதானமாக நடந்து கொண்டால் ஆதரவு பெறுவீர். சிக்கனமாக இருங்கள் அதுவே உத்தமம்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத வகையில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் படிப்பில் ஆர்வம் கூடும். நண்பர்களின் ஆலோசனை தொழிலுக்கு வளர்ச்சியைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களில் மூலம் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மனமகிழும் விஷயங்கள் நடைபெறும். உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கும்.தொழிலில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து அன்பை ஆதரவை பெறுவீர்கள்.வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் வியாபாரம் பெருகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றி கொடுக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். தொழிலில் பணிச்சுமை அனைத்தும் விலகும்.

Categories

Tech |