இன்றைய பஞ்சாங்கம்
18-08-2021, ஆவணி 02, புதன்கிழமை, ஏகாதசிதிதி இரவு 01.06 வரை பின்பு வளர்பிறைதுவாதசி.
மூலம் நட்சத்திரம் இரவு 12.07 வரைபின்பு பூராடம்.
மரணயோகம் இரவு 12.07 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
ஏகாதசி விரதம்.
பெருமாள்வழிபாடு நல்லது.
கரி நாள்.
புதியமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00.
இன்றைய ராசிப்பலன் – 18.08.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு திடீர் செலவுகள்உண்டாகும். பிள்ளைகளால் மனசங்கடங்கள்ஏற்படலாம். ஆடம்பர பொருட்கள்வாங்குவதில் கவனம் தேவை. பூர்வீகசொத்துக்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு நீங்கள் மனக்குழப்பத்துடன்காணப்படுவீர்கள். பிறரிடம்தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலைஉருவாகும். இன்று உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்றபிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதுஉத்தமம். பணிகளில் கவனமுடன்செயல்படுவது நல்லது.
மிதுனம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பார்த்தஇடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றிகிடைக்கும். உற்றார் உறவினர்கள்வருகையினால் குடும்பத்தில் சந்தோஷம்கூடும். தொழில் ரீதியாக எடுக்கும்முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கடன்பிரச்சினை தீரும்.
கடகம்
உங்களின் ராசிக்கு கடினமான காரியத்தை கூட எளிதில்செய்து முடிக்கும் துணிவோடுசெயல்படுவீர்கள். சுபசெய்திகள்கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். வியாபாரத்தில்எதிரிகள் கூட நண்பர்களாகசெயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகஇருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்றுசோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். வேலையில் கவனம் தேவை. பணவரவுதாரளமாக இருந்தாலும் அதற்கேற்பசெலவுகளும் உண்டாகும். தொழிலில்சிறுசிறு மாறுதல்களை செய்தால் லாபத்தைஅடைய முடியும். உறவினர்கள் வழியில்உதவி கிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலைஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக உணவுவிஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள்நற்பலனைத் தரும். அரசு வழியில்எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில்முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய வண்டி வாகனம்வாங்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு இல்லத்தில் தாராள தன வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமணசுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன்உதவி கிட்டும். வெளியூர் பயணங்களில்புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். வருமானம்பெருகும். புதிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள்.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியம்நிறைவேறும். ஆடம்பர பொருட்கள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரியபேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும். உடல் ஆரோக்கியம்சீராகும். தொழில் ரீதியாக இருந்தஎதிர்ப்புகள் குறையும்.
மகரம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள்ஏற்படும். நண்பர்கள் முலம் எதிர்பார்த்தகாரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். உடலில்சிறுசிறு உபாதைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவுகிட்டும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம்உண்டாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உங்கள் மதிப்பும் மரியாதையும்மேலோங்க கூடிய நாளாக இந்த நாள்அமையும். மிக கடினமான காரியத்தையும்துணிச்சலுடன் செய்து முடித்து வெற்றிபெறுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளால்லாபகரமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
மீனம்
உங்களின் ராசிக்கு நினைத்த காரியத்தை நல்லபடியாகசெய்து முடிப்பீர்கள். சகோதர, சகோதரிகளின்வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்றுமனமகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில்திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்தநாள் அமையும். பயணங்களால் அனுகூலம்உண்டாகும்.