Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! புகழ் ஓங்கும்..! சிந்தனைகள் மேலோங்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
கொடுத்த வேலையை முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

நேர்மையான எண்ணங்கள் இருக்கும். அனைத்து விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொள்வீர்கள். இன்று வளர்ச்சிக்கூடும் நாளாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகிச்செல்லும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் வந்துச்செல்லும். இலக்கியத் துறையில் உள்ளவர்களுக்கு புகழ் ஓங்கி இருக்கும். சக கலைஞர்களை மூலம் சில தொந்தரவுகள் ஏற்படும். கலைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயம் செய்பவர்களுக்கும் நல்ல சூழல் அமையும்.

கொடுக்கல் வாங்கல் விஷயமும் நல்லபடியாக அமையும். உங்களின் வேலையை நீங்களே முன்னின்று செய்ய வேண்டும். காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கையே அணுகவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெளிர்நீலம் நிறம்.

Categories

Tech |