தனுசு ராசி அன்பர்களே…!
இன்று தனலாபம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் நினைத்தது கண்டிப்பாக நடக்கும். தொழில் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனிதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் நடக்கும். பெண்களாள் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுங்கள். எந்த ஒரு பிரச்சினைக்கும் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். கருத்து வேற்றுமை இல்லாமல் நடந்து கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நண்மையைக் கொடுக்கும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரியம் வெற்றியும் இருக்கும். பண வரவு சீராகே இருக்கும். வாக்குவாதத்தை தவிர்த்துவிட்டால் இன்றைய நாள் அனைத்து விஷயங்களிலும் வெற்றி இருக்கும். அதேபோல் குடும்பத்தாரிடம் மனம் விட்டுப் பேசுங்கள். புதிய முயற்சிகளை செய்யும்போது குடும்பத்தாரிடம் கலந்து கொள்ளுங்கள்அப்போதுதான் பெரியோர்களிடமிருந்து நமக்கு நல்ல ஆலோசனை கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் கூட நல்ல முன்னேற்றம் இருக்கும்.அதே போல் வராமல் நின்ற பணம் கையில் வந்து சேரும்.
நீங்கள் கேட்ட இடத்திலும் உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. காதலர்களுக்கும் இன்று முன்னேற்றமான நாளாகவே இருக்கும். இன்று திருமண முயற்சிகளை கண்டிப்பாக மேற்கொள்ளுங்கள் நல்ல விஷயங்கள் வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.