இன்றைய பஞ்சாங்கம்
22-08-2021, ஆவணி 06, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி மாலை 05.32 வரை பின்புதேய்பிறை பிரதமை.
அவிட்டம் நட்சத்திரம்இரவு 07.39 வரை பின்பு சதயம்.
மரணயோகம்இரவு 07.39 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
ஆவணி அவிட்டம்.
வாஸ்து நாள் பிற்பகல் 3.19 மணி முதல் 3.55 மணி வரை.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
இன்றைய ராசிப்பலன் – 22.08.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள்ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகஇருப்பார்கள். சிலருக்கு புதிய வேலைவாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சிதரும் செய்திகள் கிட்டும். திருமண சுபகாரியமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு புதிய தொழில் தொடங்கும்முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம்செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால்குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதியபொருட்கள் வாங்குவதில் ஆர்வம்காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்குவருமானம் பெருகும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு- வியாபாரத்தில் கூட்டாளிகளால்தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்தோன்றி சேமிப்பு குறையும். சிக்கனமாகசெயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையைஓரளவு சமாளிக்க முடியும். எதையும்செய்வதற்கு முன் சிந்தித்து செயல்படுவதுநல்லது.
கடகம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராதபிரச்சினைகள் உண்டாகும். பெரியவர்களின்அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்குசந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம்தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது, வெளியூர் பயணங்களையும், புதியமுயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.
சிம்மம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வியக்க வைக்கும்இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம்உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல்வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள்விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியம்எளிதில் முடியும். உடனிருப்பவர்களால்அனுகூலம் கிட்டும். புதிய முயற்சிகளில்இருந்த தடைகள் விலகி முன்னேற்றம்ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அமோகமாகஇருக்கும். கொடுத்த கடன் தடையின்றிவசூலாகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு உடன் பிறந்தவர்களுடன்மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால்வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளுஅதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்குஉறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்றுகுறையும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில்உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள்ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள்தாமதமாகவே கிடைக்கும். வியாபாரத்தில்லாபம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைஓரளவு தீரும். சுபகாரிய முயற்சிகளில்வெற்றி கிட்டும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும்மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதியசொத்துக்கள் வாங்கும் முயற்சிகள்அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில்சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உற்றார் உறவினர்களால் அனுகூலம்உண்டாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடுஅதிகமாகும்.
மகரம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை காணப்படும். வெளியூர்பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதியபொருட்கள் வாங்குவதில் ஆர்வம்அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன்இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்டசுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள்வசூலாகும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகள் வழியாக நல்லசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில்மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். உங்களின்அறிவுத் திறமையால் வியாபாரத்தில்வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள்உருவாகும். உற்றார் உறவினர்கள் வழியில்இருந்த பிரச்சினை குறையும். எதிர்பாராதஉதவி கிட்டும்.
மீனம்
உங்களின் ராசிக்கு பணவரவு தாரளமாகஇருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடுகள் குறையும். வியாபாரம்சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லநேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள்வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள்குறையும்.