இன்றைய பஞ்சாங்கம்
27-08-2021, ஆவணி 11, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 06.49 வரை பின்புதேய்பிறை சஷ்டி.
அஸ்வினி நட்சத்திரம் இரவு12.47 வரை பின்பு பரணி.
அமிர்தயோகம்இரவு 12.47 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
அம்மன் வழிபாடுநல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளைசெய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – பகல் 10.30-12.00,
எம கண்டம்- மதியம் 03.00-04.30,
குளிகன்காலை 07.30 -09.00,
சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிப்பலன் – 27.08.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும்உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர்செல்லும் வாய்ப்பு அமையும். தொழில்வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள்நற்பலனை தரும். திருமண தடைகள்விலகும். ஆன்மீக தெய்வீக வழிபாட்டில்ஈடுபாடு அதிகரிக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எதிலும் ஆர்வமின்றிசெயல்படுவீர்கள். எதிர்பாராத மருத்துவசெலவுகள் ஏற்படும். வீட்டில் ஒற்றுமைகுறையலாம். தொழில் வியாபாரத்தில்வேலையாட்களை அனுசரித்து சென்றால்முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள்உதவியாக இருப்பார்கள். கடன்கள் ஓரளவுகுறையும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வியாபார ரீதியாகபொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள்விலகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும்முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும்.
கடகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் செய்ய நினைக்கும்செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறுமனவருத்தங்கள் உண்டாகும். தொழிலில்நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில்உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன்மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிலஇடையூறுகள் உண்டாகலாம். வியாபாரரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார்உறவினர்களை அனுசரித்து செல்வதன்மூலம் அனுகூலம் உண்டாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில்முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன்வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் மனமகிழும்நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியம்சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரியமனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாகஇருக்கும். நண்பர்கள் ஆதரவாகஇருப்பார்கள். புதிய பொருட்கள்வாங்குவீர்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பணவரவு தாரளமாகஇருக்கும். குடும்பத்தில் -சுபசெலவுகள்ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் சிலருக்குஇடமாற்றம் உண்டாகும். தொழில்சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாகநிறைவேறும். ஆடம்பர பொருட் சேர்க்கைஉண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும்சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவசெலவுகள் செய்ய நேரிடும். வரவுக்கேற்றசெலவுகள் இருக்கும். வியாபாரத்தில்கூட்டாளிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள்வந்து சேரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைந்துகாணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம்செலுத்துவது நல்லது. வாகனங்களால் வீண்செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்தமந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம்உண்டாகும். உத்தியோகத்தில்உடனிருப்பவர்களால் வேலைபளு சற்றுகுறையும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் உங்கள்திறமையால் வளர்ச்சி அடைவதற்கானவாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள்வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமானபலன்கள் உண்டாகும். வராத பழையகடன்கள் கைக்கு வந்து சேரும்.
மீனம்
உங்களின் ராசிக்கு நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்துசெல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள்ஏற்படாமல் தவிர்க்கலாம். பிள்ளைகளின்ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம்கிடைக்கும். வேலையாட்களின்ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்லமுன்னேற்றம் ஏற்படும்.