மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பொறுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
அதன் மூலம் சிறிது வெற்றிக் காணலாம். உங்களின் மேலதிகாரிகளுடன் மோதல் காணப்படும். உங்களின் திறமை காரணமாக அவர்களை மிஞ்சி விடுவீர்கள் என்று நினைப்பதால் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று புரிந்துணர்வின்மை காரணமாக உங்களின் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நட்பான உறவு வேண்டுமென்றால் இதனை நீங்கள் கண்டிப்பாக தடுப்பது நல்லது. பயணத்தின் பொழுது பணயிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே பயணத்தை தடுப்பது நல்லது. இன்று உங்களின் தந்தையின் ஆரோக்கியத்திற்கு பணம் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும். இன்று கால் வலி காணப்படும். ஒவ்வாமை காரணமாக இருமல், சளி போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.