மகரம் ராசி அன்பர்களே…!
இன்று இரவும் பகலும் போல், துன்பமும் இன்பமும் மாறி மாறி தான் இருக்கும்.
அதைப்பற்றியல்லாம் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். செய்யும் செயலை நீங்கள் சிறப்பாக செய்வீர்களகள். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும். தேவியின் நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பு ஏற்படும். மனதில் வீண் குழப்பம் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். தயவுசெய்து சில குழப்பமான சூழ்நிலையில் பொறுமை காப்பது நல்லது. நிதானமாக யோசித்து எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். யாரிடமும் இதற்காக வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தாரிடம் கலகலப்பான சூழ்நிலையே நிலவும். சில முக்கியமான பிரச்சினையில் தயவுசெய்து குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசனை செய்யுங்கள். மனைவியிடமும் ஆலோசனை செய்து எந்த ஒரு விஷயத்தையும் மேற்கொள்ளுங்கள். ஆன்மீகத்தில் உங்களுக்கு எண்ணங்கள் கூடும். ஆன்மீகத்திற்காக செலவும் இருக்கும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியும் கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்பட்டாலும் பிறகு நல்ல படியாகத்தான் நடந்து முடியும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பொறுமையுடனும் நிதானத்துடனும் நடந்து கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் கைகூடும்.
பொருளாதாரம் சீராக இருக்கும். சமூக அக்கறையுடனும் நடந்து கொள்வீர்கள். காதலர்களுக்கு இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாகவே இருக்கும். நீங்கள் இல்லதில் திருமணத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, மஞ்சள் நிறத்தில் ஆடை அனிவது ரொம்ப நல்லது. மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.