மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சிரமங்கள் ஏற்படும்.
அதனை நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டும். சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படும். மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபட வேண்டும். மனம் அமைதி நிலையை அமையும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். பொறுமை என்பது தேவை. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். யாரிடமும் கேலி கிண்டல் பேச்சுக்கள் செய்ய வேண்டாம். உடலில் சோர்வு இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கால தாமதத்திற்கு பின் வெற்றி உண்டாகும். அவசரம் என்பது கண்டிப்பாக வேண்டாம். நிதானத்துடன் வேலையை செய்யுங்கள். வாக்குவாதங்கள் ஏற்படும்.
அக்கம்பக்கத்தினரை அனுசரித்து செல்லுங்கள். காரியங்களில் தாமதம் ஏற்படும். பயணங்கள் செல்ல நேரலாம். வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது எச்சரிக்கை என்பது தேவை. எச்சரிக்கையுடன் பழகவேண்டும். கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். அலட்சியமாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். சக ஊழியரிடம் நிதானமாக நடக்க வேண்டும். அன்பை வெளிப்படுத்த வேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை சுமூகமாக இருக்கும். சிக்கல்கள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சக மாணவர்களிடம் மதித்து நடக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.