துலாம் ராசி அன்பர்களே…! இன்று உங்கள் ராசிக்கு எந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட உங்களின் ராசிக்கு அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு சுபிட்சமான நிலை இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீடு, வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.
இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்காண முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலமான பலன் கிடைக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 6
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு