Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (29-08-2020) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய பஞ்சாங்கம்

29-08-2020, ஆவணி 13, சனிக்கிழமை, ஏகாதசி திதி காலை 08.18 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

 பூராடம் நட்சத்திரம் பகல் 01.02 வரை பின்பு உத்திராடம்.

 நாள் முழுவதும் சித்தயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1. ஏகாதசி.

 பெருமாள் வழிபாடு நல்லது.

 

இராகு காலம் – காலை 09.00-10.30,

  எம கண்டம் மதியம் 01.30-03.00,

 குளிகன் காலை 06.00-07.30,

 சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

நாளைய ராசிப்பலன் –  29.08.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்ய நினைத்த செயல்கள் மற்றவர் தலை விடுவதனால் தடை நேரலாம். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வேண்டுமானால் சிறிது தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக செயல்பட வேண்டும் அதனால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். உடன்பிறப்பு இடமிருந்து அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்

உங்களின் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால் எந்த செயல் செய்தாலும் சிறிது தாமதம் ஏற்படும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படக்கூடும். உத்தியோக ரீதியில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் வீண் பேச்சை தவிர்க்கவும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்க வாய்ப்பு உண்டு. குழந்தைகள் பாசமுடன் இருப்பார். தொழிலில் உங்களின் திறமைக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். பெரியவர்களிடம் இருந்து கருத்து வேறுபாடுகள் நீங்கும். சமூக உறவும் ஏற்படக்கூடும். வருமானத்தில் லாபம் காண்பீர்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். உத்தியோகம் ரீதியில் எந்த முயற்சி எடுத்தாலும் அது வெற்றி காணும். வீட்டில் பெண்கள் ஆடம்பர செலவு செய்யக் கூடும். தொழில் ரீதியில் உங்கள் மேல் இருந்த போட்டி பொறாமைகள் அகலும். சுபகாரிய முயற்சி எடுப்பது நல்ல பலன் கொடுக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு தொழில் ரீதியில் பிரச்சனைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடம் தேவையில்லாமல் கருத்து வேறுபாடு ஆக நேரும். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். உத்யோக வளர்ச்சியில் நண்பர்களின் ஆலோசனை பலன் கொடுக்கும். அனுகூலம் கிடைக்கும் உடன்பிறந்தவர்களால்.

கன்னி

உங்களின் ராசிக்கு தொழிலில் எதிர்பார்க்காத தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடும். வீட்டில் உறவினர் வருகையால் செலவு வரக்கூடும். உத்தியோகத்தில் சிறு மாற்றங்களால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு. கடவுளை வணங்குவதால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். நண்பர்களின் அனுகூலம் கிட்டும்.

துலாம்

உங்கள் இராசிக்கு வீட்டில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு இருக்கு. திருமண சுப முயற்சிகளில் நினைப்பது நடக்கும். உடனிருப்பவர்களின் ஆதரவு தொழிலில் வளர்ச்சியைக் கொடுக்கும். தொழில் செய்பவர்களின் வேலை சுமை குறையும். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பு இருக்கு.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தனபாக்கியம் மந்தமாக தான் இருக்கும். வீட்டில் தேவையற்ற மன எரிச்சல் ஏற்படும். வீட்டில் விட்டுக்கொடுத்து போவதனால் தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து நீங்கலாம். தொழிலில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பரின் ஒத்துழைப்பு பலத்தைக் கொடுக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு தொழிலில் லாபம் வரக்கூடும். தொழிலில் மேல் அதிகாரிகளிடம் இருந்து அன்பையும் ஆதரவையும் பெறுவீர். வீட்டில் புத்திர வழிகளில் இருந்து நல்ல செய்தி வரக்கூடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் நல்லதை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்க ஆசை கொள்வீர்.

மகரம்

உங்களின் ராசிக்கு நீங்கள் கொஞ்சம் மந்தமாக காணப்படுவீர். வீட்டில் கணவன் மனைவியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். வெளியில் செல்வதனால் தேவையில்லாமல் மன எரிச்சல் வர நேரும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழிலில் லாபம் காண்பீர்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமையாக இருப்பீர். தொழில் ரீதியில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குழந்தைகள் ரீதியாக நல்ல செய்தி வந்து சேரும். உத்தியோக ரீதியில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் கொடுக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நல்ல நாளாக இருக்கும். உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர். வீட்டில் செலவு கூடும். உத்தியோகத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகம் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி காணும் வாய்ப்பு இருக்கு. பணத்தை சேமிக்கும் எண்ணம் உயரும்.

Categories

Tech |