நாளைய பஞ்சாங்கம்
07-10-2021, புரட்டாசி 21, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 01.47 வரை பின்புவளர்பிறை துதியை.
சித்திரை நட்சத்திரம்இரவு 09.13 வரை பின்பு சுவாதி.
சித்தயோகம்இரவு 09.13 வரை பின்பு அமிர்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 1/2.
சந்திர தரிசனம்.
நவராத்திரி ஆரம்பம்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
நாளைய ராசிப்பலன் – 07.10.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சிதரும் செய்திகள் கிடைக்கும். வீட்டுதேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில்உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம்உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும்மரியாதையும் உயரும். பொன் பொருள்சேரும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில்உடனிருப்பவர்களால் தேவையில்லாதபிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள்மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில்ஓரளவு லாபம் கிட்டும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்கள்வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர்பயணங்களால் அனுகூலப் பலன்கள்உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்துஉதவி கிட்டும். கடன் பிரச்சினைகள்குறையும். தெய்வ வழிபாடு நல்லது.
கடகம்
உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்கள் வேலையில் புதுபொலிவுடனும், உற்சாகத்துடனும்செயல்படுவார்கள். நண்பர்களின்ஆலோசனைகளால் தொழிலில் உள்ளபிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பரபொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கிடைக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் ஆரோக்கியத்திற்காக சிறுதொகை செலவிட நேரிடும். தொழில்ரீதியான நெருக்கடிகளை சமாளிக்ககூட்டாளிகளை அனுசரித்து செல்லவேண்டியிருக்கும். பிள்ளைகளின் படிப்பில்சற்று ஆர்வம் குறையும். பணவரவு சுமாராகஇருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்புகிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு தொழில் வியாபாரத்தில் சிறப்பானலாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில்தங்கள் திறமைகளை வெளிபடுத்திபாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்துசேரும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலைசற்று சுமாராக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனக்கசப்புகள்ஏற்படும். குடும்பத்தில் செலவுகள்அதிகரிக்கும். தொழில் ரீதியாக பெரியமனிதர்களின் அறிமுகம் கிட்டும். வேலைதேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள்கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்குமகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால்அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோகரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ்செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள்உதவியாக இருப்பார்கள்.
தனுசு
உங்களின் ராசிக்கு தொழில் ரீதியாக பணவரவுதாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளபிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம்உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டிபொறாமைகள் குறையும். வெளியிலிருந்துவரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெறஉடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதுநல்லது. குடும்பத்தில் வரவும் செலவும்சமமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன்நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள்வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்றுஅக்கறை செலுத்துவது நல்லது.
கும்பம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்றஅலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 10.17 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களைதவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும்நிதானத்துடன் செய்வது உத்தமம்.
மீனம்
உங்களின் ராசிக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு காலை 10.17 மணிக்கு மேல்சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும்செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. பெரியதொகைகளை கையாளும் போது நிதானமாகஇருப்பது உத்தமம்.