மீனம் ராசி அன்பர்களே..!
இன்று அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படையாக இருங்கள். உங்களின் மனதில் குழப்பத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
அனைத்து செயல்களையும் கவனமாக, திட்டமிட்டு, முடிவெடுத்து மேற்கொள்வது நல்லது. இன்று உங்களின் பணியில் திருப்தி காணப்படாது. பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இன்று உங்களின் பொறுப்புகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும். இன்று உங்களின் துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று பொழுதுபோக்குவதன் மூலம் மகிழ்ச்சியை பராமரிக்கமுடியும். இதனால் உங்களின் உறவு நல்லிணக்கம் காணப்படும். இன்று பணப் பற்றாக்குறை ஒரு பிரச்சினையாக காணப்படும். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள என்று சிறிதளவு கடன்வாங்க நேரலாம். இன்று உங்கள் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். இருமல், சளி போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம். மாணவர்களுக்கு இன்று படிப்பில் அதிக ஆர்வம் தேவை. விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வணங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.