Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வருமானம் உயரும்..! வளர்ச்சி கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும்.

வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இன்று கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். தேவையில்லாத கோபத்திற்கும் இடங்கொடுக்க வேண்டாம்.

வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பயணத்தின் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அமையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |