Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (14-10-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

14-10-2021, புரட்டாசி 28, வியாழக்கிழமை, நவமி திதி மாலை 06.53 வரை பின்புவளர்பிறை தசமி.

உத்திராடம் நட்சத்திரம்காலை 09.35 வரை பின்பு திருவோணம்.

நாள்முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சரஸ்வதி பூஜை.

ஆயுத பூஜை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00,

எம கண்டம்- காலை 06.00-07.30,

குளிகன் காலை 09.00-10.30,

சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

இன்றைய ராசிப்பலன் –  14.10.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம்சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன்இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழையகடன்கள் வசூலாகும். ஆடம்பர பொருட்கள்வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள்ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கானமுயற்சிகள் நற்பலனை தரும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சோர்வும், மந்தமும்உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகைசெலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறுதடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புதுநம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும்பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம்இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம்ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண்வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைதவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளில்நிதானம் தேவை. பேச்சை குறைக்கவும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உறவினர்களால் குடும்பத்தில்மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம்ஏற்படும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம்உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்குஎதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதியமுயற்சிகள் வெற்றியை தரும். சேமிப்புஉயரும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரத்தில்பெரிய மனிதர்களின் ஆதரவால்நற்பலன்கள் கிட்டும். சிலருக்கு வேலைவிஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள்அமையும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வரவை காட்டிலும் அதிகசெலவுகள் ஏற்படலாம். தொழில்வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும்புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர்ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின்உதவியால் பண நெருக்கடிகள் குறையும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நெருக்கடிஏற்படலாம். உற்றார் உறவினர்களால்மனசங்டங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை விலகிமுன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள்உதவியாக இருப்பார்கள். பயணங்களால்அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள்நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால்பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம்கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்குவேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் பணவரவு சுமாராகஇருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலைஉண்டாகும். வேலையில் சக ஊழியர்கள்ஆதரவாக செயல்படுவார்கள். தொழில்வியாபாரத்தில் கூட்டாளிகளின்ஆலோசனைகளால் லாபம் கிடைக்கும். கடன்பிரச்சினை தீரும். குடும்பத்தினரின் ஆதரவுகிட்டும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் பொருளாதாரமுன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள்வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள்பூர்த்தியாகும். வியாபாரத்தில் இருந்த போட்டிபொறாமைகள் குறையும்.  உத்தியோகஸ்தர்களின் திறமைகள்மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் இரட்டிப்பாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எதிர்பாராதசெலவுகளால் கையிருப்பு குறையும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். எதிர்பார்த்தஉதவி ஏமாற்றத்தை தரலாம். தொழிலில்சிறுசிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தைஅடைய முடியும். உறவினர்கள் ஆதரவாகஇருப்பார்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு நீங்கள் கடினமான காரியத்தை கூடதுணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில்உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்துசேரும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள்தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும்பயணங்களால் நல்லது நடக்கும்.

Categories

Tech |