மகரம் ராசி அன்பர்களே..!
இன்று வெற்றி உண்டாகும் நாளாக இருக்கும்.
இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். பொறுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். கவனத்தை மேற்கொண்டால் நல்ல விஷயங்களை செய்து முடிக்கமுடியும்.
தடை மற்றும் தாமதம் உண்டாகும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும். சரியான உணவு முறையை பேணவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இன்று யாரை நம்புவது என்ற குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். மனதினை தெளிவு படுத்தவேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு குழப்பங்கள் தீரும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 8.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் இளமஞ்சள் நிறம்.