Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! பணவரவு கிடைக்கும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் நல்ல விஷயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் போன பொருளை கண்டுபிடித்து விடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளால் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கக்கூடும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியளிக்கும்.

அண்டை வீட்டார் உறுதுணையாக இருப்பார்கள். பெண்கள் வீண் பேச்சுகளை குறைத்து செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் சில விஷயங்களில் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். குடும்பத்தில் பணிசுமைகள் இருப்பதால் கோவங்கள் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலுள்ள பெண்களுக்கு பணிச்சுமை இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது. சிறு சிக்கல்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய தெளிவான விளக்கங்கள் கிடைக்கக்கூடும். தெளிவான சிந்தனை மேலோங்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |