மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். உங்களின் அமைதியான மனநிலை காரணமாக முக்கியமான முடிவுகளை எடுக்கலாம்.
பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். உங்களின் பணிக்கு மேலதிகாரிகளின் அங்கீகாரம் பெறுவீர்கள். உங்களின் துணையுடன் நேர்மறை எண்ணங்களை பகிர்ந்துக் கொள்வதற்கு சிறந்த நேரமிது. நீங்கள் இருவரும் தரமான நேரத்தை பகிர்ந்துக் கொள்வீர்கள். இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். இன்று உங்களின் நிதி வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்துவீர்கள். இன்று உங்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை எதுவும் காணப்படாது. இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் உண்டாகும். திறமைக்கு ஏற்ற பாராட்டை பெற்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம். நீங்கள் விநாயகர் வழிபாட்டை மேற்கொள்வது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.