மேஷம் ராசி அன்பர்களே…!
இன்று செயல்களில் கண்டிப்பாக தற்காப்பை பின்பற்ற வேண்டும்.
எவருக்குமே தகுதியை மீறிய வாக்குறுதிகளை தயவு செய்து கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு இருக்கும். வெளியூர் பயணத்தில் சில மாற்றங்களும் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலச்சல், வேலை வழு இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல் நிலையைப் பொறுத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும்.
அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். தேவையில்லாத பஞ்சாயத்துக்களில் தயவுசெய்து அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். காதலர்கள் இன்று கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தை எப்பொழுதும் போலவே கடைபிடியுங்கள் மாலை நேரங்களில் கண்டிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்திடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ப்ரவுன் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ப்ரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டமான திசை: வட மேற்கு. அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் நீல நிறம்.