Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (03-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

03-10-2020, புரட்டாசி 17, சனிக்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை துதியை திதி.

ரேவதி நட்சத்திரம் காலை 08.50 வரை பின்பு அஸ்வினி.

பிரபலாரிஷ்ட யோகம் காலை 08.50 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

 

இராகு காலம் – காலை 09.00-10.30,

  எம கண்டம் மதியம் 01.30-03.00,

 குளிகன் காலை 06.00-07.30,

 சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

நாளைய ராசிப்பலன் –  03.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் அமைதி கூடும். பெரியவர்களுடன் என்ன கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோகத்தில் புதிய திட்டம் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சுபகாரியங்களில் உள்ள தடைகள் அகன்று  முன்னேற்றம் காணும். தொழிலில் அனுபவம் உள்ள பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பணவரவு மந்தமாக தான் இருக்கும். வாகனங்களால் வீண் விரயம் ஏற்படும்.பூர்வீக சொத்துக்களின் மூலம் டென்ஷனும் அலைச்சலும் ஏற்படும். லாபத்தை அடைய கடின உழைப்பு வேண்டும். நண்பர்களின் மூலம் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே நல்லது.

மிதுனம்

உங்களின் ராசிக்கு சுபகாரியம் உண்டாகும். பணவரவு இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குழந்தைகள் கல்வியில் ஆர்வமாக இருப்பார்கள். உடன் இருப்பவர்கள் உடன் பேச்சுவார்த்தை அனுகூலத்தை கொடுக்கும். தொழிலில் பதவி உயர்வு உண்டாகும்.

கடகம்

உங்கள் இராசிக்கு உற்றார் உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதால் பிரச்சனை நீங்கும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லக்கூடும். உடல்நிலையில் பாதிப்பு நீங்கும். புதிய வாகனங்களை வாங்கும் ஆர்வம் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சோர்வு, சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். காலை 08.50 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியை பேணுங்கள் அதுவே நல்லது.புதிய காரியங்களை மதியத்திற்கு பெண் செயல்படுத்துங்கள் அதுவே நல்லது. புதிய வாய்ப்பு தேடி வரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு தேவையற்ற பிரச்சனைகளால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். கடன் பாக்கி வசூலாவதில் தாமதம் ஏற்படும். காலை 08.50 க்கு பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் பொறுமையாக இருங்கள் அதுவே நல்லது.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப காரியம் சிறப்பாக நடக்கும். உத்தியோக ரீதியில் புதிய கருவிகளை வாங்க ஆர்வம் அதிகரிக்கும். உடல்நிலை சீராக இருக்கும். வரவேண்டிய பழைய கடன் பாக்கி அனைத்தும் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தொழிலில் ஆர்வம் இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வீட்டில் குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வரும். பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும். சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உடல் நிலை சோர்வாகவும் சுறுசுறுப்பு இல்லாமலும் இருக்கும். உறவினர்கள் வழியில் வீண் செலவு உண்டாகும். முயற்சிகள் எடுப்பதனால் தடைக்கு பின் வெற்றி கிடைக்கும். சிந்தித்து செயல்படுங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வெளியூர் பயணங்களால் தேவையில்லாமல் அலைச்சல் உண்டாகும். எதிர்பார்க்காத செலவுகளை சமாளிப்பதற்காக கடன் வாங்க நேரும். மன உறுதியுடன் பிரச்சனைகள் எதிர்கொள்ளும் நிலை இருக்கும். தொழிலில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் லாபம் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும். உற்றார் உறவினர் வருகையால் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உத்தியோக ரீதியில் வெளியில் நட்பு உண்டாகும். தொழிலில் பெயர் புகழ் செல்வாக்கு உயர்ந்து நிற்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நிம்மதி இல்லாத நிலை உருவாகும். எவ்வளவு சிரமப்பட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் இடம் பொறுமையாக செயல்பட்டால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் மூலம் அனுகூலம் கிட்டும்.

Categories

Tech |