கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும்.
அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
காதலில் உள்ளவர்கள் கவனமாக இருக்கவேண்டும். தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இன்றைய நாள் தேர்தல் நாள் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப்பெருமான் வழிபாடு மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.