நாளைய பஞ்சாங்கம்
04-10-2020, புரட்டாசி 18, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி காலை 07.28 வரை பின்பு தேய்பிறை திரிதியை.
அஸ்வினி நட்சத்திரம் பகல் 11.52 வரை பின்பு பரணி.
சித்தயோகம் பகல் 11.52 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
சுபமுகூர்த்த நாள்.
சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
நாளைய ராசிப்பலன் – 04.10.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு எந்த வேலை செய்தாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சந்தோஷம் பெருகும்.புதிய காரியங்களை செய்வதற்கு அனுகூலம் உண்டாகும். தெய்வீக நாட்டம் இருக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். குழந்தைகள் மூலம் வீண் செலவு ஏற்படும். பெண்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். தொழிலில் மந்தநிலை நீங்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் புத்திர வழியில் சுப செலவு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுகூலம் உண்டாகும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடன் அனைத்தும் வசூலாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் இனிய நிகழ்ச்சி நடக்கும். உறவினர்கள் மூலம் அனுகூலம் பெருகும். பொன்னும் பொருளும் வாங்கும் யோகம் உண்டாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குழந்தைகள் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்வீர்கள். பணவரவு இருக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு மனதில் நல்ல மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். புதிய வேலையில் வாய்ப்பு அமையும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கூடும். சுபகாரியங்களில் நல்ல பேச்சுவார்த்தை உண்டாகும். குழந்தைகள் மூலம் பெருமை அடைவீர்கள்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சனை உண்டாகும். பெரியவர்களின் திருப்தியற்ற நிலைக்கு ஆளாக கூடும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் மற்றவர்களிடம் பேச்சுவார்த்தையை குறைத்துக் கொள்ளுங்கள் அதுவே நல்லது. வெளியூர் பயணம் செல்வதை தவிர்த்து விடுங்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். வீட்டில் கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் வெளியூர் பயணம் செல்லக் கூடும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் மூலம் சுப செய்தி வரும். கடன் தொல்லை நீங்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உடல்நிலை சீராக இருக்கும். வீட்டில் சுப செலவு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து குவியும். தொழிலில் லாபம் அமோகம் நிலை இருக்கும். கடன் தொல்லை ஓரளவுக்கு நீங்கும் வழி உண்டாகும். சுபமுகூர்த்த முயற்சி வெற்றி கிடைக்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குழந்தைகள் வழியில் வீண் விரயம் உண்டாகும். வீட்டில் இருப்பவர்களிடம் மனநிம்மதி அகலும். தொழிலில் வெற்றி உண்டாக வேண்டுமானால் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உற்றால் உறவினர்களின் அனுகூலம் கிடைக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு தொழில் கூட்டாளிகளால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். வீட்டில் எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பிரச்சினை தீரும்.எந்த செயல் செய்தாலும் சிந்தித்து செயல்படுங்கள் அதுவே நல்லது.
கும்பம்
உங்களின் ராசிக்கு தொழிலில் பொருளாதாரம் சிறப்பாக நிலை இருக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்லக் கூடும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு காரியங்களை முடிப்பதற்கு இடையூறு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நிதானத்துடன் இருப்பதே நல்லது. வீண் செலவுகளால் வீட்டில் பிரச்சனை வரும். சிக்கன் அத்துடன் இருங்கள் அதுவே நல்லது. நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி உண்டாகும்.