கன்னி ராசி அன்பர்களே..!
இன்று தடைகளை சந்திக்க நேரும் ஆனால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இன்று உங்களுக்கு இறுக்கமான வேலை காணப்படும், இருந்தாலும் நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி காண்பீர்கள். இன்று நீங்கள் வேலையில் மும்முரமாக இருப்பீர்கள். இன்று காதலுக்கு உகந்தநாள் அல்ல. இன்று அமைதியான உறவைப்பேண பல தடங்கல்கள் ஏற்படலாம். இன்று சம்பாத்தியத்தை விட செலவுகள் அதிகமாக காணப்படும், இது உங்களுக்கு சுமையாகிவிடும். பணத்தைக் கையாளுவதில் கவனமாக இருக்கவேண்டும். இன்று உங்களின் ஆரோக்கியத்திற்கான பொதுப் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுப் பெறும். இன்று அறிவாற்றல் அதிகரிக்கும். நீங்கள் முருகனை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.