நாளைய பஞ்சாங்கம்
04-11-2021, ஐப்பசி 18, வியாழக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 02.44 வரை பின்புவளர்பிறை பிரதமை.
சித்திரை நட்சத்திரம்காலை 07.42 வரை பின்பு சுவாதி நட்சத்திரம்பின் இரவு 05.07 வரை பின்பு விசாகம்.
சித்தயோகம் காலை 07.42 வரை பின்புஅமிர்தயோகம் பின்இரவு 05.07 வரை பின்புசித்தயோகம்.
நேத்திரம் – 0 ஜீவன் – 0.
அமாவாசை.
தீபாவளிப் பண்டிகை.
லட்சுமிகுபேர பூஜை.
லக்ஷ்மிநரசிம்மருக்கு உகந்தநாள்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00,
எம கண்டம்- காலை 06.00-07.30,
குளிகன் காலை 09.00-10.30,
சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
நாளைய ராசிப்பலன் – 04.11.2021
மேஷம்
உங்களின் ராசிக்கு நீங்கள் மன உறுதியுடன் எந்தசெயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர்வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில்முன்னேற்றம் உண்டாகும். வெளியூர்பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாகஇருக்கும். சேமிப்பு உயரும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாகஇருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம்செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன்ஒற்றுமையாக செயல்பட்டு லாபம்அடைவீர்கள். இதுவரை இருந்த போட்டிபொறாமைகள் மறையும். எதிர்பார்த்தஉதவிகள் கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலைஉருவாகும். வியாபாரத்தில் உங்களின்அலட்சியத்தால் எதிர்பாராத வீண்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எந்தவிஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வதுநல்லது. எடுக்கும் முயற்சியில்உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் குறையும்.
கடகம்
உங்களின் ராசிக்கு நீங்கள் நினைத்த காரியத்தைநினைத்தபடி செய்து முடிக்க உற்றார்உறவினர்களை அனுசரித்து செல்வதுநல்லது. பிள்ளைகளால் சிறு சிறுமனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில்வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால்புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம்அதிகரிக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால்குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். நண்பர்கள் உங்கள்வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவர்கள். தொழில்ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உறவினர்கள் வருகையால்குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத அலைச்சலால் மனஉளைச்சல் ஏற்படலாம். உடனிருப்பவர்களைஅனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாகஇருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறிசெயல்படுவார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும்நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளால்பெருமை சேரும். திருமணபேச்சுவார்த்தைகள் கைகூடும். தெய்வவழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பழையபாக்கிகள் வசூலாகும். தொழில் சம்பந்தபட்டநவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள்வெற்றியை தரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாகநெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரவளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள்கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் செலவுகள்கட்டுக்குள் இருக்கும். உறவினர்களால்அனுகூலம் கிட்டும். பெண்களுக்கு பணிசுமைகுறையும்.
தனுசு
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் வரவுக்கு மீறியசெலவுகள் உண்டாகும். உறவினர்களால்மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்துசெல்வதன் மூலம் பிரச்சினைகளைதவிர்க்கலாம். நீங்கள் எடுக்கும்முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவுகிட்டும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில்கவனம் தேவை.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுபசெலவுகள்உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம்அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் உடல்ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார்உறவினர்களின் அன்பையும் ஆதரவையும்பெறுவீர்கள். தொழிலில் புதிய யுக்திகளைபயன்படுத்தி லாபம் அடைவீர்கள்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண்பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலைஉண்டாகலாம். பணவரவு சுமாராகஇருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவுகுறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மீனம்
உங்களின் ராசிக்கு தேவையற்ற பயணங்களினால்அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள்ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வண்டிவாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன்செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில்சற்று கவனம் தேவை. மற்றவர்கள்விஷயங்களில் தலையிடாமல் இருப்பதுநல்லது.