கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மனவுறுதி மூலம் இன்று நீங்கள் உங்களின் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பணியில் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள்.
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகள் உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சோர்வான மனநிலை காரணமாக இன்று உங்களின் துணையை தவறாக புரிந்துக் கொள்வீர்கள். அமைதி மற்றும் எளிதான அணுகுமுறை மூலம் நீங்கள் நல்ல புரிந்துணர்வை வளர்க்க முடியும். பணப்புழக்கம் இன்று தாராளமாக இருக்கும். கிடைக்கும் அதிகப்படியான பணத்தை உங்களால் சேமிக்க முடியும். இன்று நீங்கள் முதுகு வலியால் அவதி பட வாய்ப்புள்ளது. தூக்கமின்மையால் பாதிக்கப்படுவீர்கள். உடற்பயிற்சி அல்லது யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது. மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம். முருக வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.