மிதுனம் ராசி நேயர்கள்:
இன்று சங்கடமான சூழ்நிலையை கொஞ்சம் சந்திக்கக்கூடும்.
இன்று பெருமையுடன் செயல்படுவது எதிர்காலத்தில் நன்மை பெற உதவும். தொழில் வளர்ச்சி பெற கூடுதலாகதான் பணிபுரிய வேண்டியிருக்கும். பண செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு சாந்தத்தை கொடுக்கும். வீட்டை விட்டு வெளியே தங்குவதற்கான சூழல் இருக்கும். களைப்பு, பித்து நோய் போன்றவை ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். வீண் கவலை மனதில் இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தயவுசெய்து தவிர்க்கவேண்டும். வெளிவட்டார தொடர்புகளில் கவனம் வேண்டும். அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து வேற்றுமையும் நீக்கும்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சுற்றுச் சூழலைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள் போதும். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் செய்யாமல் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச்செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம்: சிகப்பு மற்றும். இளமஞ்சள் நிறம்.