சிம்மம் ராசி அன்பர்களே..!
எவருக்கும் ஏமாற்ற நினைக்காதீர்கள்.
அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட்டு, அதனால் மனவருத்தம் உண்டாகும். திருமண முயற்சிகள் மேற்கொள்வதற்கு சாதக முயற்சிகள் உண்டாகும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். எதையும் கட்டுப்படுத்திக் கொண்டு நிதானமாக செல்வது நல்லது. திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். இன்று புதிதாக வேலை தொடங்ககூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். மாணவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று நீங்கள் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்று உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் நீல நிறம்.