Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (06-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

06-10-2020, புரட்டாசி 20, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி பகல் 12.32 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.

கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.54 வரை பின்பு ரோகிணி.

சித்தயோகம் மாலை 05.54 வரை பின்பு அமிர்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

முருக வழிபாடு நல்லது.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

நாளைய ராசிப்பலன் –  06.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உறவினர்கள் மூலம் சுபச்செய்தி உண்டாகும். குழந்தைகள் நலனில் கவனம் கொள்ளுங்கள். தொழிலில் பணிச்சுமை கூடினாலும் உடன் இருப்பவர்களால் பணிச்சுமை சிறிது குறையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் தெம்பு உண்டாகும். பெரியவர்களின் ஆதரவால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இருந்து வரவேண்டிய தொகை வந்து குவியும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை மந்தமாக தான் இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள் அதுவே நல்லது. வெளியூர் பயணங்கள் செல்வதன் மூலம் அலைச்சல் உண்டாகும். உத்யோகத்தில் புதிய நபர்களின் நட்பு உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். தொழிலில் சிலருக்கு கௌரவம் உண்டாகும். வீட்டில் ஒற்றுமை பலப்படும். வெளியூர் செல்லும் வாய்ப்பு கூடும். தொழிலில் புதிய நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பு காணும். தொழிலில் கடினமான செயல் கூட எளிதில் முடிந்துவிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும். பணிச்சுமை அதிகரிக்கும். வெளி நபர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோக ரீதியில் எந்த முயற்சி எடுத்தாலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள் அதுவே நல்லது.

துலாம்

உங்கள் இராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனம் குழப்பத்துடன், சோர்வுடன் இருப்பீர்கள். மற்றவர்களை நம்பி கடன் கொடுக்கவோ, வாங்கவோ தவிர்ப்பது நல்லது. தொழிலில் மேலதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தனவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சிவ செய்தி வந்து சேரும். அரசு ரீதியில் எதிர்பார்த்த சலுகை உண்டாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். போட்டி பொறாமை அனைத்தும் நீங்கும். சேமிப்புகள் அதிகரிக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் பெருகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை கூடும். வெளி பயணங்களால் லாபகரமான பலன் கிடைக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். தொழிலில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சனை உருவாகும். குழந்தைகள் மூலம் மன சங்கடம் பெருகும். சேமிப்பு குறையும். தொழிலில் லாபம் ஓரளவே இருக்கும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகும். உற்றார் உறவினர் மூலம் உதவி கிடைக்கும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வரவுக்கு மீறிய செலவு உண்டாகும். நீங்கள் புது முயற்சி எடுப்பதால் உறவினர்களை தடையாக இருப்பார்கள்.எந்த விஷயங்களிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத இடத்திலிருந்து உதவி வர கூடும்.தொழிலில் மேலதிகாரிகளிடம் எழுந்து அனுகூலம் உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்குஉத்தியோக ரீதியில் புதிய கருவிகளை வாங்கும் முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். திடீரென்று நல்ல செய்தி வரும். சுப செய்தியில் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் இதுவரை இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் பழைய கடன் அனைத்தும் வசூல் ஆகக்கூடும்.

Categories

Tech |