மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எடுத்துச்சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவுச்செய்ய வேண்டியதிருக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் சிறிது கவனம் செலுத்த வேண்டும். எதிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே வெற்றி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக காணப்படும். கோபமான பேச்சை தவிர்த்துவிடுவது நல்லது. சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதியளிக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 .
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.