கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் பேச்சில் அனுபவம் வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவிகளை செய்வார்கள்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை பெற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று தொழில் தொடர்பான விசயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவகப்பணியை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டியது ஏற்படும். பயணங்களால் லாபமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சரியான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளுங்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வி விஷயத்தில் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்களில் நல்ல வெற்றி வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.