விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று எதிர்ப்புகள் ஓங்கி நிற்கும் நாளாக இருக்கும். கூடுமானவரை இன்று எதிலும் கவனத்துடன் ஈடுபட வேண்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
பழைய கடனைப்பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். எதிலும் நிதானமான போக்கையே வெளிப்படுத்த வேண்டும். வியாபாரத்தில் திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம். போட்டிகளை சமாளிக்கக்கூடிய சூழல் ஏற்படும். உத்யோகத்தில் இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். வாடிக்கையாளரிடம் அனுசரித்து பேசுங்கள். அன்பை மட்டும் வெளிப்படுத்துங்கள். வாக்குறுதிகள் எதுவும் குடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள். மாணவ மாணவியர்கள் எதிலும் நிதானமான போக்கையே வெளிப்படுத்துங்கள். கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் சிரமம் காணப்படும். சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் நிறம்.