Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (24-11-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

24-11-2021, கார்த்திகை 08, புதன்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 03.04 வரை பின்புதேய்பிறை சஷ்டி.

புனர்பூசம் நட்சத்திரம்மாலை 04.29 வரை பின்பு பூசம்.

நாள்முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

தனியநாள்.

வாஸ்து நாள் காலை 11.09 மணி முதல் 11.45 மணி வரை.

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

நாளைய ராசிப்பலன் – 24.11.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு வியாபார ரீதியாக பொருளாதாரம் நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமத நிலை உண்டாகும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்புடன் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமையும்அமைதியும் நிலவும். கணவன் மனைவிஇடையே இருந்த கருத்து வேறுபாடுகள்நீங்கும். நீண்ட நாள் வராது இருந்த கடன்கள்எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதியதொழில் தொடங்கும் முயற்சியில்முன்னேற்றம் உண்டாகும். புதிய பொருட்கள்வீடு வந்து சேரும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் விட்டுகொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய மாற்றங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்மூலம் அனுகூலம் கிட்டும். தொழிலில் புதியவாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் நிறைவெறும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படலாம். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கலாம்.

கன்னி

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும். வேலை தேடுவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எண்ணியது நிறைவேறும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். உங்கள் ராசிக்குகாலை 09.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு தொடங்குவது நல்லது.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். வேலையில் தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.50 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பதுநல்லது.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உறவினர்கள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். சகோதர சகோதரிகளால் அனுகூலம் கிட்டும். ஆடம்பரபொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த ஒற்றுமையாக செயல்பட்டுலாபம் அடைவீர்கள். பழைய கடன்கள் குறையும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த காரியத்தையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்ற நிலை ஏற்படும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவ உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் உடனிருந்தார்களின் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புடன் செய்து முடிப்பீர்கள். வருமானம் பெருகும்.

Categories

Tech |