மகரம் ராசி அன்பர்களே..!
இன்று குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றி விடுவீர்கள். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு அனுகூலமாக இன்றையநாள் இருக்கும். வழக்கில் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை இருக்கும்.
பிரபலமானவர்களின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைக்கொடுக்கும். எதிலேயும் கவனத்துடன் இருக்க வேண்டும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களிடமிருந்து உதவியும் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணியில் தடையின்றி அனைத்து விஷயங்களும் நடக்கும். மாணவ-மாணவிகளுக்கு இன்று கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்று முன்னேற்றமான தருணங்கள் அமையும். கணவன் மனைவி இருவரும் எந்தவொரு விஷயத்தையும் தீர ஆராய்ந்து செயல்படுங்கள், வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல முன்னேற்றமான லாபம் ஏற்படும். சிவபெருமானை வழிபடுவது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: இளம் மஞ்சள் நிறம்.