Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (07-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

07-10-2020, புரட்டாசி 21, புதன்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.47 வரை பின்பு தேய்பிறை சஷ்டி.

ரோகிணி நட்சத்திரம் இரவு 08.35 வரை பின்பு மிருகசீரிஷம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30,

எம கண்டம் காலை 07.30-09.00,

குளிகன் பகல் 10.30 – 12.00,

சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

இன்றைய ராசிப்பலன் –  07.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குழந்தைகள் மூலம் மின் செலவு ஏற்படும். தொழிலில் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கவனம் முக்கியம்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.திடீரென்று உதவி கிடைக்கப் பெற்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் தொல்லை விலகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் வரவுக்கு மீறிய செலவு கூடும்.உற்றார் உறவினர்களிடம் தேவை இல்லாத கருத்து வேறுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் மறைமுக பாதிப்பு இருந்தாலும் லாபத்தில் பாதிப்பிருக்காது. எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. நண்பர்களின் உதவி கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கல நிகழ்வு உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் அனுகூலம் உண்டாகும். அரசு வேலையில் தகுதிக்கேற்ற உயர்வு பதவி கிடைக்கும். உத்யோகத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயற்பட்டால் லாபம் பெருகும். வெளியூர் பயணங்கள் கூடும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை சீராக இருக்கும்.உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்லக்கூடும். தொழிலில் பல போட்டிகளுக்கு இடையே லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வருமான நிலை பெருகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்பில்லாமல் செய்வீர்கள். திருமணங்களில் தாமத நிலை உருவாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும், முன்னேற்றம் காண்பீர்கள்.உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள் அதுவே நல்லது.

துலாம்

உங்கள் ராசிக்கு சிறிது குழப்பமாகவும் மன உளைச்சலுடன் இருப்பீர்கள்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடித்து கொள்ளுங்கள் அதுவே நல்லது. தேவை இல்லாமல் வெளி நபர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தொழிலில் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். உத்தியோகத்தில் கடுமையான காரியங்கள் கூட எளிதில் முடியும். வீட்டில் சுப காரியம் நிறைந்த சூழ்நிலை உருவாகும். பணவரவு உண்டாகும். கடன்கள் தீரும்.

தனுசு

உங்களின் ராசிக்கு சுப செலவுகள் உண்டாகும். குழந்தைகளின் உடல்நலம் சீராக இருக்கும்.புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபமுகூர்த்த நிலை கை கூடும். தொழிலில் வேலைப் பளு சற்று குறைந்தே இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் ஆர்வமில்லாமல் இருப்பீர்கள். வீட்டில் குழந்தைகளால் அமைதி குறையும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்வதனால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அரசுத்துறை ரீதியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வருமான நிலை பெருகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் நிதானத்துடன் செய்யுங்கள். உற்றார் உறவினர்களின் வருகையால் செலவு கூடும். சுபகாரிய முயற்சிகளில் தாமதம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் நட்பு உண்டாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீடு தேடி சுப செய்தி வந்து சேரும். தொழிலில் எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினை தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும். உத்தியோக ரீதியில் புதிய கருவி வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.

Categories

Tech |