மேஷம் ராசி அன்பர்களே..!
நீங்கள் நினைப்பதை சரி என்று வாதிடும் குணம்கொண்ட உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாளாக இருக்கும்.
மற்றவருடன் பழகும் பொழுது எப்படி பழகுகிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு பழகுங்கள். பலன்கள் உங்களுக்கு தாமதமாக கிடைக்கும். பொறுமையுடன் இருந்தால் இலக்குகளை அடைவதில் வெற்றிப் பெறலாம். பணியை பொறுத்தவரை இன்று உங்களுக்கு அதிக முயற்சித் தேவை. இன்று பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்களின் உணர்வுகளை நகைச்சுவையுடன் பகிர்ந்துக் கொள்வதன் மூலம் காதலில் வெற்றி பெறலாம். இதனால் மோதல்களைக் குறைத்துக் கொள்ளலாம். இன்று உங்களின் நிதி நிலைமை சிறப்பாக இல்லை. இன்று பணத்தட்டுப்பாடு காணப்படும். அதிகப்பணம் சம்பாதிக்கும் திறமை குறைந்தே காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. தொண்டை சம்பந்தமான எரிச்சல் காணப்படும். குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து விடுங்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மட்டும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமாக இருப்பது நல்லது. நரசிம்ம வழிபாட்டை மேற்கொள்வது நல்லப் பலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல நிறம்.