மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் வெளிப்படையாகவும் விஷயங்களை லேசாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். அனுசரணையான போக்கை மேற்கொள்ள வேண்டும். அமைதியாக இருங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று கவனமுடன் பணியாற்றுங்கள். கவனச்சிதறலுக்கு இடங்கொடுக்க வேண்டாம். இன்று உங்களின் உணர்வுகளை உங்கள் துணையிடம் திணிக்க வேண்டாம். அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுப்பதன் மூலம் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிகப்படியான செலவுகள் இன்று கவலையை ஏற்படுத்தும். இன்று நீங்கள் சிறப்பாக சேமிக்க ஒரு திட்டத்தைத்தீட்டி செயல்படுத்த வேண்டும். இன்று வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். இன்று உங்களின் உணவுமுறையில் கவனம் செலுத்துவது நல்லது. யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நல்லப்பலனை பெறலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் முன்னேற்றமான நிலை காணப்படும். கூடுதல் முயற்சி செய்தால் நல்லப்பலன் கிடைக்கும். நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நன்மையைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.