கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு பொறுப்புகளும் பதட்டமும் காணப்படுவதால் பக்தியுடன் ஸ்லோகம் சொல்வதன் மூலம் நீங்கள் உங்களின் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முடியும்.
இசை கேட்பதன் மூலமும் உங்களின் மனதை பதட்டமின்றி வைத்துக்கொள்ள முடியும். சக பணியாளர்களிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ளுங்கள், அவர்களை கவனமுடன் கையாளுங்கள். இன்று உங்களின் துணையிடம் மனம் திறந்து உணர்வுகளை பகிர்ந்துக் கொள்வது நல்லது. இது நல்லப் புரிந்துணர்வை ஏற்படுத்தும். உங்களிடம் குறைந்த அளவுப்பணம் காணப்படும். பெரியளவில் முதலீடு செய்யும் முடிவுகளை தவிர்ப்பது நல்லது. யோகா மேற்கொள்வது ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொடுக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கேளிக்கையில் மனம் ஈடுபட தூண்டும். கெட்ட சகவாசங்களை தவிர்த்துவிடுவது நல்லது. நீங்கள் பைரவ வழிபாடு செய்தால் நல்லப்பலனைப் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.