துலாம் ராசி அன்பர்களே..!
இன்று புதிய தொடர்புகள் ஏற்படும், அவர்களின் ஆதரவும் கிடைக்கும். இன்று முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களின் சாதனைகள் குறித்து மகிழ்ச்சியடைவீர்கள்.
இன்று நீங்கள் சிக்கலான பணிகளையும் எளிதாக கையாளுவீர்கள். இது உங்களுக்கு திருப்தியை ஏற்படுத்தும். இன்று உங்களின் சக பணியாளர்களின் ஆதரவும் கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இதனால் இருவரும் மகிழ்வுடன் இருக்கமுடியும். இன்று பணம் வரவு அதிகமாகக் காணப்படும். ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் வழங்கிய பணம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். யோகா அல்லது தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்களின் ஆரோக்கியமும் மன அமைதியும் மேம்படும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் குபேர வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்லப் பலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.