மீனம் ராசி அன்பர்களே..!
இன்று விரைவாக திடீர் முடிவுகளை எடுக்க வேண்டாம். இன்று உங்களின் எண்ணத்திலும் செயலிலும் பக்குவம் தேவை. பணியிடத்தில் தொழில் சார்ந்த அணுகுமுறை தேவை.
எந்தவிதமான கவன சித்தர்களுக்கும் இன்று ஆளாகாதீர்கள். பாதுகாப்பற்ற உணர்வோடு உங்களின் துணையுடன் பழக வேண்டாம், இது உங்களுக்கு உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும். பணத்தை கவனமாக கையாள வேண்டும். அதிகமாக சேமிக்க வேண்டும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். நீங்கள் சிவன் வழிபாடு மேற்கொள்வது நல்லப்பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.