Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (09-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

09-10-2020, புரட்டாசி 23, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி.

திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.26 வரை பின்பு புனர்பூசம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

அம்மன் வழிபாடு நல்லது.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00,

 எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

 குளிகன் காலை 07.30 -09.00,

 சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

நாளைய ராசிப்பலன் –  09.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் லாபம் கிட்டும். மாணவ-மாணவிகள் படிப்பில் திறமை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியம் கைகூடும். கடன் தொல்லை தீரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவு உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தொழிலில் உடன் இருப்பவர்களிடம் தேவையில்லாத பிரச்சினை உருவாகி மறையும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உத்யோகத்தில் பண வரவு அமோகமாக இருக்கும். வீட்டில் பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். பொன்னும் பொருளும் வாங்கும் யோகம் இருக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமை அனைத்தும் நீங்கும். வரவேண்டிய கடன் பாக்கி கைக்கு வந்து சேரும்.

கடகம்

உங்களின் ராசிக்கு தொழிலில் மந்த நிலை உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகையால் செலவு கூடும். தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்வதால் அனுகூல பலன் கிடைக்கும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க வாய்ப்பு இருக்கும். கடன் தொல்லை தீரும். தெய்வ வழிபாடு உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் மனக்கசப்பு நீங்கி ஒற்றுமை கூடும். வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகம் ரீதியில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொழில் தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் மூலம் மன மகிழ்ச்சி செய்தி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழிலில் உடன் பணிபுரிவோர்களால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன்னும் பொருளும் சேரும்.

துலாம்

உங்களின் ராசிக்கு தொழிலில் உடன் இருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனை வரும். வாகனங்களால் வீண் செலவு உண்டாகும். உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள் அதுவே நல்லது. பெரியவர்களின் ஆறுதல் வார்த்தை மனதிற்கு தெம்பை கொடுக்கும். உத்யோகத்தில் ஓரளவு லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு மன அமைதி குறையக்கூடும். சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதம் ஏற்படும்.நிதானத்தைக் கடைப்பிடித்து கொள்ளுங்கள் அதுவே நல்லது. உத்யோகத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாதீர்கள். வெளி பயணங்களில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தர்கள் தொழிலில் புதுப்பொலிவுடன் உற்சாகத்துடன் இருப்பார்கள். நண்பர்களின் ஆலோசனை தொழிலில் இருந்த பிரச்சினையைத் தீர்க்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் அது வெற்றியே கொடுக்கும். வீட்டில் பண வரவு இருக்கும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். பழைய கடன் பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உடல்நிலை சீராக இருக்கும். கடவுள் தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லக்கூடும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உடல்நிலையில் பலவீனமாக இருப்பீர்கள். மற்றவர்கள் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்க்கவும்.எந்த முயற்சி எடுத்தாலும் பொறுமையுடன் இருங்கள் அதுவே நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு தொகையைச் செலவிடுவீர்கள்.உத்யோக ரீதியில் உள்ள நெருக்கடிகளை சமாளிப்பதற்காக உடன் இருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் கவனம் குறையும். பணவரவு சுமாராக தான் இருக்கும். உற்றால் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

Categories

Tech |