மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் திறமையை வெளிப்படுத்தி வெற்றிப் பெறுவீர்கள். சிறப்புடன் செயலாற்ற மனதில் தெளிவு தேவை. இன்று உங்களின் சக பணியாளர்களுடன் நல்லுறவைப் பராமரிப்பீர்கள்.
அவர்களிடமிருந்து தக்க சமயத்தில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். அதன்மூலம் வளர்ச்சிக் காண்பீர்கள். இன்று காதலுக்கு உகந்தநாள். இன்று உங்களின் துணையுடன் அன்பான தருணங்களை கழிப்பதன்மூலம் மன நிறைவைக் காண்பீர்கள். இன்று நிதி விஷயங்களுக்கு சாதகமான நாள். இன்று உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். தொடைகளில் வலி மற்றும் விரைப்புத் தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கிய ரீதியாக நல்ல பலனைப் பெறுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கேளிக்கையில் மனம் ஈடுபடத் தூண்டும். அவர்கள் கெட்ட சகவாசங்களை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பைரவ வழிபாடு மேற்கொள்வது நல்லப்பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.