ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று சாதுரியமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள்.
வசீகரமான தோற்றம் வெளிப்படும். செல்வநிலை சீராக இருக்கும். இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிலும் பொறுமையுடன் ஈடுபடுங்கள். யாரையும் குறைகூற வேண்டாம். வீன் கவலைகள் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். குறிக்கோளற்ற வீண் அலைச்சலை தவிர்த்து விடுங்கள். சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் சோர்வு உண்டாகும்.
பணிச்சுமை அதிகரிக்கும். பெண்களால் நீங்கள் லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சிரமமின்றி எதையும் செய்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பயணங்களின் போது கவனம் தேவை. மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். கணவன் மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். தேவையில்லாத வாக்குவாதத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானத்தை மேற்கொள்ளவேண்டும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.