Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நல்லுறவு மேம்படும்..! தேவைகள் பூர்த்தியாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
மனதிலிருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் நாளாக இருக்கும்.

வருங்கால நலன்கருதி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனது சந்தோசமாக இருக்கும். புதிய முயற்சிகளை செயல்படுத்த விரும்புவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். பணவரவு சீராக இருக்கும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். சரியான நேரத்திற்கு நீங்கள் தூங்கச்செல்ல வேண்டும். ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. எந்தவொரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள்.

குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு அவ்வப்போது வந்துச்செல்லும். பேசும்பொழுது கவனம் தேவை. சுப காரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். தடைகள் தாண்டி ஓரளவு முன்னேறிச் செய்வீர்கள். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். உங்களின் தனித்திறமை வெளிப்படும். முயற்சிகளில் ஓரளவு சிறப்பு உண்டாகும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பாதுகாப்பாக இருக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் வெளிர் நீலம்.

Categories

Tech |